சித்தியுடன் உறவு... கண்டித்த சித்தப்பாவை, போட்டுத் தள்ளிய வாலிபர்-தாயும் உதவிய கொடுமை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கருமாத்தூர் அருகே ஒருகிராமத்தில் சித்தியுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர், அதைக் கண்டித்த தனது சித்தப்பாவை, தனது சித்தி மற்றும் தாயுடன் இணைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்களும், கொலைகளும், தொடர் கதையாகி வருகின்றன. கள்ளக்காதலில் சிக்கி எத்தனையோ உயிர்கள் போயுள்ளன. பெரும்பாலும், கள்ளக்காதலைக் கண்டித்தவர்கள்தான் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மதுரை அருகே ஒரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.

கருமாத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். வயது 38, இவரது மனைவி பராசக்திக்கு வயது 35. அலெக்ஸ் பாண்டியனின் அண்ணன் பாண்டியின் மகன் 19 வயது பிரசாத். பிரசாத்தின் தாயார் பெயர் பூமா. இவருக்கு வயது 40.

கடந்த 8ம் தேதி அலெக்ஸ் பாண்டியன் தனது தோட்டத்தில் தலையில் பாறாங்கல்லால் போட்டு நசுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் பிரசாத்தான் இந்தக் கொலையைச் செய்தார் என்றும், இந்தக் கொலைக்கு அவரது தாயார் பூமா மற்றும் சித்தி பராசக்தி ஆகியோர் உடந்தை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து பிரசாத்திடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பாண்டி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பூமாவும், பிரசாத்தும், அலெக்ஸ் பாண்டியனுடன் வசிக்க ஆரம்பித்தனர். பாலிடெக்னிக்கில் படித்து வரும் பிரசாத்துக்கும், சித்தி பராசக்திக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு விட்டது. இதை தாயார் பூமாவும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்துத் தெரிய வந்த அலெக்ஸ் பாண்டியன் தனது மனைவியையும், பிரசாத்தையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், தங்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் அலெக்ஸ் பாண்டியனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்கு பூமாவும் ஆதரவு கொடுத்தார்.

அதன்படி 7ம் தேதி அலெக்ஸ் பாண்டியனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர் பராசக்தியும், பூமாவும். அப்போது அங்கு வந்தார் பிரசாத். நெல் நாற்று பிடுங்கி விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் தலையில் மூவருமாக சேர்ந்து பெரிய கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து போய் விட்டனர்.

3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+