பயங்கர ரவுடி ஸடீல் ரவி 4வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
ஈரோடு: பிரபல ரவுடி ஸ்டீல் ரவி நான்காவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வகி ஜங்ஷன் கார்த்திக். ஈரோடு என்.ஜி.ஓ காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று அவரை படுகொலை செய்தது. இந்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மற்றவர்களை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ஸ்டீல் ரவி (வயது 44) மற்றும் அவரது கூட்டாளிகள் சில்லரை கார்த்தி, ஸ்ரீதர் அசோக் (24), பிரபு (25), வேலூரைச் சேர்ந்த அனுப்குமார் சிங் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி ரவி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில் பிரபடி ரவுடி ஸ்டீல் ரவி மற்றும் சில்லரை கார்த்தி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்டீல் ரவி நான்காவது முறையாக குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார் என்பது குறிபிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications