எங்கு போனாலும் 'தாறுமாறாக திரிந்த' மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!
தர்மபுரி: எந்த இடத்திற்குப் போனாலும் பல ஆண்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டு தாறுமாறாக திரிந்த மனைவியைக் கண்டு பொறுக்க முடியாத ஒரு கணவர், அவரை கொடூரமாக தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 43 வயதான இவருக்கு சிகப்பு மல்லி என்ற பெயரில் 35 வயதில் மனைவி இருந்தார். இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.
ஒவ்வொரு ஊராக சென்று கட்டுமானத் தொழில் உள்ளிட்ட கூலி வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வந்தனர். இதுபோல சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்தபோது ஏகப்பட்ட ஆண்களுடன் சிகப்பு மல்லிக்குப் பழக்கம் ஏற்பட்டது. வரைமுறையில்லாமல் அவர் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இத்தனைக்கும் கணவர் கூடவே தங்கியிருந்து கொண்டு இப்படி நடந்து வந்துள்ளார் சிகப்பு மல்லி. இதனால் மனம் நொந்து போனார் சொக்கலிங்கம். பின்னர் வேலை முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார் சொக்கலிங்கம்.
ஊருக்குப் போன பின்னர் சிகப்பு மல்லி மட்டும் கோவைக்குப் போனார். அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். அங்கும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. பல ஆண்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தனது மனைவி கடிவாளம் இல்லாத குதிரையாக தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தகவல் சொக்கலிங்கத்தை வந்தடைந்தது. பெரும் மன வேதனை அடைந்த அவர் கோவைக்கு சென்று மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்.
ஊருக்கு வந்த பின்னர் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை நாலரை மணியளவில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. அப்போது பெரும் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், மனைவி தலையை அரிவாளால் கொடூரமாக அறுத்து கொலை செய்தார். பின்னர் வி.ஏ.ஓ சம்பத்திடம் சென்று சரணடைந்தார்.
இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications