அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

இது குறித்து சட்டசபையில் அவர் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கை வருமாறு,
கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாணவ, மாணவியரும் இடையில் நிற்காமல் உயர் கல்வி கற்று, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுகிறது.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள், 7 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்), 11 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. புதிய கல்லூரிகள் ஏற்படுத்துவதுடன் இப்போதுள்ள கல்லூரிகளில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்வி பயிலும் வகையில் நல்லதொரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதன் அடிப்படையில் இப்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இக் கல்லூரிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி ஏற்கனவே குறிப்பிட்ட அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
இந்த நிதியிலிருந்து புதிய மேஜைகள், நாற்காலிகள் வழங்குதல், நவீன கரும்பலகைகள், அறிவிப்புப் பலகைகள் அமைத்தல், மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேஜைகள், கணினி நாற்காலிகள் வழங்குதல், புத்தகங்கள் வைக்க அலமாரிகள் அமைத்துத் தருதல், நூலகங்களுக்குப் புத்தகங்கள் வழங்குதல், நூலகங்கள் கணினிமயம் ஆக்கப்படுதல், தரமான ஆய்வுக் கூடங்கள் அமைத்தல், அறிவியல் துறைகளுக்கு புரொஜெக்டர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரமான குடிநீர் வழங்க வசதிகள் ஏற்படுத்தித் தருதல், மாணவர் விடுதிகளில் சமையலறைக் கூடங்களை மேம்படுத்துதல், கழிப்பறை வசதிகள், மின் விளக்கு, மின் விசிறி ஏற்படுத்தித் தருதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக ரூ.100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications