கோடை விழா: மே 12,13ல் ஊட்டியில் ரோஜா கண்காட்சி
ஊட்டி: கோடை விழாவை முன்னிட்டு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழாவை சுற்றுலாத் துறை நடத்தி வருகிறது. அப்போது ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழாவை முன்னிட்டு வரும் 5ம் தேதி முதல் மாத இறுதி வரை பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலா துறை சார்பில் வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் வரும் 6,7 ஆகிய 2 தேதிகளில் கூடலூர் புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது.
இது தவிர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரோஜா கண்காட்சி வரும் 12 மற்றும் 13 தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் நடக்கிறது. மே 18, 19 மற்றும் 20 ஆகிய 3 தேதிகளில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், 26, 27 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களின் புகழ் பெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications