ஐ.ஏ.எஸ். தேர்வில் நெல்லை மாணவர் வெற்றி-ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நடுப்பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் மதியழகன். அவர் அடைக்கலபட்டினம் மின்வாரியத்தில் வசூல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் செந்தில் குமார். அவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் 910 பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில் செந்தில்குமார் 544வது இடத்தைப் பிடித்துள்ளார்.
செந்தில் குமார் 8ம் வகுப்பு வரை பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை மாதாப்பட்டினம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூவில் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.
இதையடுத்து திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். ஆனால் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் விடாது முயற்சி செய்து படித்து இந்த ஆணடு இலக்கை அடைந்தார்.
இது குறித்து செந்தில்குமார் கூறுகையில்,
சாதாரண கிராமத்தில் பிறந்து மேல்நிலை கல்வி வரை தமிழ் வழியில் படித்தேன். எனது பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் ஊக்கமே வெற்றிக்கு காரணம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்காக தீவிரமாக முயற்சித்தேன். தற்போது பலன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
செந்தில் குமாரின் தாய் கனகவள்ளி பீடி சுற்றும் தொழிலாளி. தம்பி ரவிசந்திரன் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications