இன்று கள்ளழகர் தசாவதாரம்- திரண்டு வரும் பக்தர்கள்

இப்ப சாமி எங்க இருக்கு ? இதுதான் மதுரையில் இரண்டு தினங்களாக பக்தர்கள் கேட்கும் கேள்வி. வைகையில் இறங்கிய அழகர் மெதுவாக ஆற்றங்கரை வழியாக வண்டியூர், தேனூர் என சென்று அங்கே மாண்டூக முனிவருக்கு விமோசனமும், நாரைக்கு முக்தியும் அளிக்கிறார். பின்னர் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த நிகழ்வுகளைக் காண பல்வேறு ஊர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு தேடி தேடி சுவாமியை தரிசனம் செய்ய வைக்கின்றனர் மதுரை நகர மக்கள். இதற்காவே சாமி இப்போ எங்க இருக்கு என்று கேட்டு விசாரிக்கின்றனர்.
வைகை ஆற்றில் இறங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் ஞாயிறுக்கிழமை காலையில் வைகையில் எழுந்தருளினார். அழகரைக்காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சக்கரைக் கிண்ணத்தில் சூடம் ஏற்றி மனமுருகி வழிபட்டனர்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமராய மண்டபத்திற்கு சென்ற அழகர் அங்கு காத்திருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலுக்கு சென்றார்.
திங்கட்கிழமை காலை அங்கிருந்து ஏகாந்த சேவையில் புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு நாரைக்கு முக்தி அளித்து விட்டு அங்கிருந்து மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். அங்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி தரும் அழகரைக்காண இன்றைக்கும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications