சர்கோஸிக்கு மாபெரும் தோல்வி.. பிரெஞ்சு அதிபரானார் பிரான்காய்ஸ் ஹோலன்ட்
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தோல்வி அடைந்து விட்டார். எதிர்க்கட்சியான சோசலிச கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரான்காய்ஸ் ஹோலன்ட் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் 1995க்குப் பின்னர் சோசலிச கட்சியின் சார்பில் அதிபராகும் முதல் தலைவர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கிறது.
முதல் சுற்றுத் தேர்தலில் முதலிடத்தைப் பிடித்து சர்கோஸியின் முடிவை கட்டியம் கூறிய ஹோலன்ட், நேற்று நடந்த 2வது சுற்றுத் தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சர்கோஸிக்கு 48.1 சதவீத ஓட்டுக்களே கிடைத்தன.
கருத்துக் கணிப்புகளிலும் ஹோலன்டே முன்னணியில் இருந்து வந்தார். அவரது வெற்றியை ஹோலன்டின் ஆதரவாளர்கள் பாரீஸில் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிரான்ஸின் பொருளாதார அவல நிலை, மக்களுக்கு சர்கோஸி மீது நிலவி வரும் வெறுப்பலை ஆகியவற்றைப் பயன்படுத்தி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் ஹோலன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 14 அல்லது 15ம் தேதியன்று அதிபராக ஹோலன்ட் பதவியேற்பார்.
புதிய அதிபர் ஹோலன்டுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் ஆளாக வாழ்த்துக் கூறினார். பல்வேறு உலகத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications