விருதுநகர் அருகே சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி: சோகமயமான திருவிழா

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவில் திருவிழாவின்போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அதை தூக்கிச் சென்ற 3 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள தென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பரம் தூக்குதல் இன்று நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு சப்பரம் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வந்தபோது அதில் இருந்த கலசம் மேலே சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் சப்பரத்தை தூக்கிச் சென்ற மாரீஸ்வரன், முத்துச்செல்வன், கார்மேகம் ஆகிய 3 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவிழாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்று கடந்த வாரம் குடியாத்தம் கருபுலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது தேரில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும் ஏர்வாடி தர்கா சந்தனகூட்டின்போது அலங்கார வண்டியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+