சிரஞ்சீவி மருமகனின் சென்னை வீட்டில் ரெய்ட்!

Subscribe to Oneindia Tamil

Sirish Bharatwaj
சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜின் சென்னை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜாவும் சிரிஷ் பரத்வாஜும் 2007-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். சிரிஷ் பரத்வாஜை நான்கு வருடமாக காதலிப்பதாகவும் காதலை பெற்றோர் ஏற்காததால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஸ்ரீஜா தெரிவித்தார். இது சிரஞ்சீவிக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் தந்தது. எனவே மகளை வீட்டில் சேர்க்கவில்லை. ஸ்ரீஜா கணவர் வீட்டிலேயே குடியேறினார்.

சில மாதங்களுக்கு பின் சிரஞ்சீவி குடும்பத்தினர் சமரசம் ஆனார்கள். மகளையும் மருமகனையும் தங்களோடு சேர்த்துக் கொண்டனர். இதற்கிடையில் ஸ்ரீஜாவுக்கும் சிரிஷ் பரத்வாஜுக்கும் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிரிஷ் தன்னை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்துவதாக ஸ்ரீஜா குற்றம்சாட்டினார். ரூ.1.5 கோடி வரதட்சணை கேட்பதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்தார்.

விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்ரீஜா. விவாகரத்துக்காக தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிரிஷ் பரத்வாஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினார்கள். இரண்டு கார்களில் வந்த அவர்கள் மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை சிரிஷ் பரத்வாஜ் வீட்டில் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்த ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றி காரில் எடுத்துச் சென்றனர்.

14 அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றனர். என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.

சிரஞ்சீவி இப்போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+