உடல்நிலை தேறி வீடு திரும்பினார் 'துக்ளக்' ஆசிரியர் சோ.ராமசாமி

Subscribe to Oneindia Tamil

Cho Ramaswamy
சென்னை: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ உடல்நிலை தேறி நேற்று வீடு திரும்பினார்.

'துக்ளக்' ஆசிரியர் சோ.ராமசாமி சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் நோய் தொற்று மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முழுமையாக ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு, நேற்று பூரண குணமடைந்த சோ.ராமசாமி மருத்துவமனையிலிருந்து நேரடியாக துக்ளக்' அலுவலகத்திற்கே சென்று உற்சாகத்துடன் தனது பத்திரிகைப் பணிகளைத் தொடங்கினார். அதன்பிறகே வீட்டுக்கு சென்றார்.

இதுகுறித்து விசாரித்தபோது, "சாதாரண காய்ச்சல், ஜலதோஷம்தான். கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அதனால் மருத்துவமனைக்குப் போகவேண்டியாதாகிவிட்டது. இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்," என்றார் சோ உதவியாளர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+