ஜனாதிபதி தேர்தல்: பி.ஏ. சங்மாவுக்கு அதிமுக, பிஜேடி ஆதரவு

ஜனாதிபதி தேர்தல் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இம்முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளரை நிறுத்த முயல்வது தான் அதற்கு காரணம். ஜனாதிபதி வேட்பாளராக கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். முக்கிய எதிர்கட்சியான பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யஷ்வந்த சின்ஹா பிரணாப் தான் ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார்.
இதற்கிடையே முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா, தனது மகள் அகாதா சங்மா எம்.பி.யுடன் தமிழகம் வந்து நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்க ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பி.ஏ. சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்போம் என்று பிஜு ஜனதாதள தலைவரும், ஒரிசா முதல்வருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் சங்மாவுக்கு ஆதரவு கரம் நீட்ட அதிமுகவும் முன்வந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications