கிரேக்க உணவகத்தில் தமிழ் மெனுகார்ட் - அறிமுகப்படுத்திய இறையன்பு!

இந்த தமிழ் மெனு கார்டை இறையன்பு ஐஏஎஸ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் உள்ளது 'கிரிப்டாஸ் பை வில்லி' (Kryptos by Willi). சென்னையில் உள்ள ஒரே கிரேக்க உணவகம். சர்வதேச அளவில் பிரபலமானது.
கிரேக்க நாட்டின் அத்தனை உணவு வகைகளும், அதே ஒரிஜினல் சுவையுடன் இங்கே கிடைக்கும். இந்த உணவகத்தின் தலைமை செஃப் பெயர் வில்லி. அவர் பெயரையே இந்த உணவகத்துக்கு வைத்து பெருமை செய்துள்ளார் இதன் உரிமையாளர் விபின் சச்தேவ்.
பர்கண்டிஸ், டஸ்கானா மற்றும் சப்வே உணவகங்களையும் இவர்தான் நடத்தி வருகிறார். இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு கண்டம் அல்லது நாட்டின் பிரத்தியேக உணவுகளை வழங்குகின்றன.
தனது உணவகங்களில் எப்போதும் ஏதாவது ஒரு புதுமையை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள விபின், இந்த முறை எந்த நட்சத்திர ஹோட்டலும் செய்ய முயற்சிக்காத புதுமை ஒன்றைச் செய்துள்ளார்.
தனது உணவகங்களின் மெனு கார்டை தமிழில் தந்துள்ளார் விபின். வெறும் உணவின் பெயராக இல்லாமல், அந்த உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் காய்கறிகள் அல்லது இறைச்சி வகைகள் மற்றும் மூலப் பொருட்களின் பெயர்களும் தமிழில் கொடுக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
ஏதோ ஒப்புக்கு போட்ட மாதிரி இல்லாமல், மிகத் தரமாக இந்த மெனு கார்டை அவர் தயாரித்துள்ளார். இந்த மாதிரி உயர் தர ஹோட்டல்களுக்குப் போன பிறகு, 'இந்த ஐட்டத்தின் பெயரே வாயில் நுழையவில்லையே... எப்படி ஆர்டர் செய்வது' என்று இனி தடுமாற வேண்டிய அவசியமே இல்லை.
இப்போதைக்கு க்ரிப்டாஸ் மற்றும் பர்கண்டிக்கு தமிழில் மெனு கார்டு போட்டிருக்கும் விபின், விரைவிலேயே தனது மற்ற உணவகங்களையும் தமிழ்மயமாக்குகிறார்.
இறையன்பு
இந்த மெனு கார்ட்டு அறிமுக விழா கிரிப்டாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் இறையன்பு ஐ.ஏ.எஸ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மெனு கார்ட்டை அறிமுகப்படுத்தினார்.
தமிழில் பேசுவதையே சிலர் தரக்குறைவாக நினைக்கும் இந்த காலகட்டத்தில் மேலை நாட்டு உணவகமான தனது உணவகத்தில் தமிழில் மெனு கார்ட்டை அறிமுகம் செய்த விபின் சச்தேவை இறையன்பு ஐ.ஏ.எஸ், பாராட்டினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications