நிருபமா ராவுக்கு புதுச்சேரி பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமாராவ் மற்றும் முன்னாள் நீதிபதி வெங்கடாச்சலயா ஆகியோருக்கு புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்திய தூதர் நிருபமாராவ் நாளை மறுநாள் நடைபெறும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அவருக்கு கவுரவ டாக்டர் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி அவர் சிறப்பு உரையாற்றுகிறார்.
இதனிடையே இன்று நாகூர் தர்காவிலும், வேளாங்கன்னி தேவாலயத்திலும் தூதர் நிருபமா ராவ் வழிபாடு நடத்தினார்.












Click it and Unblock the Notifications