மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சம்பந்தி மறைவு
நாகர்கோவில்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சம்பந்தி டாக்டர் சந்திரமோகன் நேற்று அதிகாலை நாகர்கோவிலில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சந்திரமோகன்(64). கண் மருத்துவ நிபுணரான அவர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சம்பந்தி ஆவார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியாற்றியவர். பின்னர் நாகர்கோவிலில் மருத்துவமனை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், வெங்கடேஷ், கிரி என்ற மகன்களும் உள்ளனர். கிரி டாக்டராக உள்ளார். வெங்கடேஷ் அழகிரியின் மருமகன் ஆவார்.
டாக்டர் சந்திரமோகன் உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று மாலை நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காந்தி அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, கயல்விழி அழகிரி ஆகியோரும் அவருடன் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், எம்.எல்.ஏ. புஷ்பலீலா, ஆல்பன், நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள், டாக்டர்கள் அஞ்சலி செலுத்தினர். சந்திரமோகனின் உடல் தகனம் இன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications