போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவையொட்டி உலகத் தமிழ் இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று 4 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முடக்கி 40 ஆயிரம் பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டனர். 25 ஆயிரம் தமிழ்க் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர்.
போர் முடிந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் ஒன்றரை லட்சம் தமிழார்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இவர்களில் அனேகம் பேர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சுகிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்னம்ஜ்ம் தடுப்பு முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றன.தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு முடிவே இல்லாமல் போய்விட்டது.
முள்ளிவாய்காலிலும் வடக்கு கிழக்கிலும் 2009-ம் ஆண்டு யுத்தத்தில் உயிரிழந்துபோன பல்லாயிரம் தமிழ் மக்களுக்கு உலகத் தமிழ் அமைப்பு அஞ்சலி செலுத்துகிறது.
இந்தச் சூழலில் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் வகையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளான சிங்கள ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அத்துடன் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உரிமையான சுய நிர்ணய உரிமையை மீட்டெடுத்துத் தர வேண்டும் என்று சர்வதேச நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications