இலங்கை இறுதிப் போர் குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டும்: இங்கிலாந்து லேபர் கட்சி
லண்டன்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த 3-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொழிற்கட்சியின் தலைவரான எட் மிலிபாண்ட் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் போர் முடிவடைந்த மூன்று ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இலங்கை அரசால் இந்த விவகாரத்தில் பொறுப்புக் கூறும் வகையிலான நம்பகமான புலனாய்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினால் கூறப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் குறித்து புலனாய்வு செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது.
பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவும், நல்லிணக்க நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினாலேயே, இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச, சுதந்திரமான விசாரணை தேவை.
இலங்கைக்கு எதிரான அண்மைய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானத்தை இதனாலேயே ஆதரித்தோம். இதனால் இலங்கை அரசாங்கம் தாம் நியமித்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஐநாவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்த விவகாரங்களில் எந்த விதமான ஈடுபாட்டையும் வெளிப்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவதை இங்கிலாந்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications