ஈரோடு திமுக செயற்குழு கூட்டத்தில் என்.கே.கே.பி. ராஜா, முத்துசாமி மோதல்

ஈரோடு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜா பேசுகையில், நமது மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் சிலர் முத்துசாமி மாவட்ட செயலாளராக வேண்டும் என்று வேலை செய்து வருகின்றனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.
அதில் குறிபபாக அக்னி சந்துரு, இளைஞர் அணி பழனிசாமி, இறைவன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் கொடுத்து, முத்துசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பலரிடம் தெரிவித்து வருகின்றனர். உறுப்பினர் விண்ணப்பங்களை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர். இவர்களை பிடித்து உதைக்க வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த அக்னி சந்துரு, இந்த விவகாரம் பற்றி பேச இது உகந்த இடம் அல்ல. செயற்குழு கூட்டத்தில் அரசியல் மட்டுமே பேசுங்கள் என்றார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார்.
அப்போது முத்துசாமி பேசுகையில்,
நான் 30 வயதாக இருக்கும் போது எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. ஆனால் அதை நான் வைத்துக் கொள்ளவில்லை. செங்கோட்டையனுக்கு கொடுத்தேன். எனவே, எனக்கு மாவட்ட செயலாளராகும் ஆசை எல்லாம் கிடையாது. ஆனால் திமுகவில் போட்டி உண்டு.
விண்ணப்பங்களை யார் கொடுக்க வேண்டும் என தலைமை சொல்லட்டும். அதன்படி நடந்து கொள்கிறேன். மற்றவர்கள் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் அதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
திமுகவில் நான் சேரும் போது, என்னுடைய நிலையை தெரிவித்து தான் சேர்ந்தேன். ஆனால் என்னை திமுகவில் ஓரங்கட்டி வருகின்றனர். அப்படி என்னை ஓரங்கட்டினால் ஒதுங்க இடம் இருக்காது என நினைத்து செயல்படுகின்றனர். அவர்களது ஆசை ஒருபோதும் வெற்றி பெறாது. எனவே, மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி கட்டாயம் இருக்கும் என்று சொல்லி அமர்ந்தார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி. ராஜாவுக்கும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஈரோடு மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர் பதவிக்காக மோதும் இவர்கள் இருவருமே மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications