பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: மே 31-ல் "பாரத் பந்த்" -பாஜக கூட்டணி அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான சரத் யாதவ் இதுபற்றி கூறுகையில், மே 31- தேதி நடைபெற உள்ள பாரத் பந்துக்கு பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவும் கோரப்படும் என்றார்.
மேலும் பெட்ரோலிய நிறுவனங்கள்தான் விலை உயர்வை அறிவித்துள்ளன என்று மத்திய அரசு தப்பித்துக் கொள்ளும் வகையிலான பதிலைக் கூறிவருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் மத்திய அரசின் இந்த பதிலானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் கூட்ட திட்டமிட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கையாலாகதனமே இதற்குக் காரணம் என்றார் சரத் யாதவ்.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ7.50 காசுகள் அதிகரிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications