2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்ல கத்காரி முன்வைத்த 3 'மந்திரங்கள்'!
மும்பை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய்கக் கூட்டணி வெற்றி பெற 3 மந்திரங்களை பாஜக தலைவர் நிதின்கத்காரி முன்வைத்திருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கத்காரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவாக்கம் செய்வது, பாஜகவின் வாக்கு வங்கியை 10 விழுக்காடு அதிகரிப்பது, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை உருவாக்குதல் என்பனதுதான் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கான மந்திரம் என்றார்.
இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன் பாஜக செயல்படவில்லை.. காரணம் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் கதாரி கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் வரும் 31-ந் தேதி நடைபெற உள்ள பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ள அத்வானியின் அறிக்கையையும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் வசித்தார்.
மோடி விவகாரம்
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டமானது நாட்டின் பிரதான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு முன்பாக உட்கட்சி மோதல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை உருவானது. கத்காரியின் ஆதரவாளரான சஞ்சய் ஜோஷி தேசிய செயலர் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்தே தாம் தேசிய செயற்குழுவில் பங்கேற்கப் போகிறேன் என்று குஜராத் முதல்வர் மோடி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications