உஸ்மானியா பல்கலை.யின் மாட்டிறைச்சி திருவிழாவுக்கு எதிராக சத்தீஸ்கரில் போராட்டம்
ராய்ப்பூர்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் முஸ்லிம் ராஷ்டிரிய மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாட்டிறைச்சி திருவிழா
உஸ்மானியா பல்கலைக் கழக விடுதியில் ஒரே மாதிரியான உணவு வகைகளே வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் மாட்டிறைச்சி உணவும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர் .இதைத் தொடர்ந்து பல்கலைக் கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தினர்.இதில் விதம் விதமான மாட்டிறைச்சி வகை உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு மாணவர் தரப்பில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மாணவர்களிடையே மோதல் மூண்டது. போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகள் வீசி மோதலைத் தவிர்த்தனர்.
திருவிழாவுக்கு எதிர்ப்பு
இத்தகைய மாட்டிறைச்சி திருவிழாக்களால் மக்களிடையே பிரிவினை மனோபாவம்தான் அதிகரிக்கும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் ராஷ்டிரிய மோர்ச்சா என்ற அமைப்பு சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாடுகளை வெட்டிக் கொலை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சி பயன்பாட்டுகு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முகமது அப்சல் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய மாட்டிறைச்சி திருவிழாக்களால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரை பிளவுபடுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றனர் என்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளே இந்தத் திருவிழாக்களின் பின்னணியில் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முஸ்லிம் ராஷ்டிரிய மோர்ச்சா அமைப்பின் சத்தீஸ்கர் மாநில ஒருங்கிணைப்பாளர் சலிம் ராஜ் கூறுகையில், பல்கலைக் கழகங்களில் இத்தகைய மாட்டிறைச்சி திருவிழாக்களுக்கு அனுமதி தரக்கூடாது. இது சமூகத்தில் பிளவையே ஏற்படுத்தும் என்றார்.
ஆக்ராவைச் சேர்ந்த ஷஜத் அலி பேசுகையில், நாட்டின் ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தினரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு மத நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய திருவிழாக்கள் அதுவும் பல்கலைக் கழக வளாகங்களில் நடத்தப்படுவது என்பது மத நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக் கூடாது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications