புதுக்கோட்டை எஸ்.பி. அதிரடி மாற்றம் - தேர்தல் கமிஷன் அதிரடி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. தமிழ்ச்சந்திரன் அரதிடியாக மாற்றம் செய்யப்பட்டு, அங்கு புதிய எஸ்.பி.யாக, சென்னை அடையாறு துணை கமிஷனர் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை இடைத் தேர்தல், ஜூன் 12 ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை எஸ்.பி. தமிழ்ச் சந்திரன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக, தேர்தல் கமிஷனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி, புதுக்கோட்டை எஸ்.பி. தமிழ்ச்சந்திரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை புதிய எஸ்.பி.யாக, சென்னை அடையாறு துணை கமிஷனர் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications