நில ஆக்கிரமிப்பு: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவின் மைத்துனர் கைது
தென்காசி: அதிமுக நிர்வாகி கொடுத்த நில ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே வேளப்பநாடாரூரைச் சேர்ந்தவர் ஒன்றிய அதி்முக நிர்வாகி வைத்தியலிங்கம். அவர் சேர்ந்தமரம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அன்று எங்கள் ஊரைச் சேர்ந்த ராஜாமணி, திருமலைசாமி ஆகியோரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் 82.5 சென்ட் புஞ்சை நிலத்தை கிரையத்திற்கு வாங்கி அனுபவித்து வருகிறேன்.
கடந்த 20ம் தேதி எனது புஞ்சை நிலத்திற்கு செல்லும்போது திருமலாபுரத்தைச் சேர்ந்த குமரவேல் நாடார் மகன் வேலுமயில் என்பவர் என்னை வழிமறித்து நிலம் என்னுடையது, உள்ளே வரக் கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததார். எனவே, எனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து வேலுமயிலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேலுமயில் நெல்லை தொகுதி எம்.பி. ராமசுப்பு மனைவியின் சகோதரர் ஆவார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications