சொத்து தகராறில் தாய், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகன்
திண்டுக்கல்: சொத்து தகராறில் தாய், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சிக்குட்பட்ட முத்துகாமாபட்டியைச் சேர்ந்தவர் போஸ் (65). அவரது மனைவி பொட்டியம்மாள் (55). அவர்களின் மகன்கள் ஈஸ்வரன் (40), லிங்கசாமி (35). ஈஸ்வரனும், லிங்கசாமியும் திருமணமாகி தந்தை போஸுக்கு சொந்தமான மல்லிகை தோட்டத்தில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
சொத்தை பிரித்து கொடுக்குமாறு போஸிடம் லிங்கசாமி கடந்த 2 நாட்களாக கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை போஸ் தனது மனைவி மற்றும் மூத்த மகன் ஈஸ்வரனுடன் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லிங்கசாமி சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தையுடன் தகராறு செய்தார்.
தகராறு முற்றியபோது ஆத்திரம் அடைந்த லிங்கசாமி அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து தந்தையின் தலையில் அடித்தார். இதில் போஸ் ரத்த வெள்ளத்தில் தோட்டத்தில் விழுந்தார். தனது கணவர் தாக்கப்படுவதை தடுக்க வந்த பொட்டியம்மாளையும் லிங்கசாமி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தலையில் வெட்டுபட்ட பொட்டியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஈஸ்வரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய போஸை சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொட்டியம்மாளின் உடலைக் கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து லிங்கசாமியை தேடி வருகின்றனர்.
சொத்துக்காக மகனே பெற்ற தாய், தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications