விரைவில் அமைச்சரவை மாற்றம்: நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி?

Subscribe to Oneindia Tamil

Nainar Nagendran and Jayalalitha
சென்னை: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், அதில் 6 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் நீண்ட நாட்களாக வெளிவருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி, மீண்டும் வந்துவிட்டார். தமிழக சட்டசபை கூட்டம் முடிந்த பின்பு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் ஜூன் 12ம் தேதி நடைபெற இருப்பதால் தற்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இருக்காது என கூறப்படுகின்றது. ஆனால் விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த புதிய அமைச்சரவையில் குறிப்பாக தென் சென்னை மாவட்டம் பெருங்குடி எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாள், குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் போன்றவர்கள் புதிய அமைச்சர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிக்க உள்ளார்களாம்.

வலுவான இலாக்காக்களை வைத்துள்ள 5 அமைச்சர்களின் இலாக்கள் மாற்றம் செய்யப்படும் என்ற பேச்சும் கிளம்யுள்ளது. இந்த தகவல் ஆளுநர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+