டி.என்.ஏ. சோதனைக்காக ரத்த மாதிரி கொடுத்த 'உட்டாலக்கடி' என்.டி. திவாரி
டேராடூன்: மரபணு சோதனைக்காக முன்னாள் ஆந்திர ஆளுநர் என்.டி. திவாரி இன்று தனது ரத்த மாதிரியைக் கொடுத்தார்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆந்திர ஆளுநருமான என்.டி.திவாரியை(86) தமது தந்தை என்று உரிமை கோரி ரோகித் சேகர் (32) என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதும் என்றும் கூறப்பட்டது. டேராடூன் நீதிபதி உத்தரவுப்படி போலீசார் மற்றும் டாக்டர் குழுவுடன் திவாரியின் இல்லத்திற்கே சென்று ரத்த மாதிரியை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று 2 டாக்டர்கள் அடங்கிய குழு டேராடூனில் உள்ள திவாரியின் வீட்டுக்கு சென்று ரத்த மாதிரி எடுத்தது. அப்போது மனுதாரர் ரோஹித் சேகரும், அவரது தாயும் அங்கிருந்தனர். இதனால் திவாரியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திவாரி தான் தனது தந்தை என்று சேகர் தொடர்ந்த இந்த வழக்கு திவாரி ரத்த மாதிரி கொடுக்க மறுத்ததால் கடந்த 4 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனது என்பது குறிப்பிடத்தக்கது. மரபணு பரிசோதனை முடிவு வந்தால் திவாரி குற்றமற்றவரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications