For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்!

By Mathi
Google Oneindia Tamil News

ராவல்பிண்டி: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று குறுகிய தூரத்தில் இலக்கைத் தாக்கக் கூடிய ஹத்ப்-IX ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது.

அக்னி ஏவுகணையை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஷாஹீன் ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது பாகிஸ்தான்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹத்ப்-III என்ற ஏவுகணையை விண்ணில் செலுத்தியிருந்தது. இது 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது

இந்நிலையில் 60 கிலோ மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹத்ப்-IX ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்கு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் விஞ்ஞானிகளைப் பாராட்டியுள்ளனர்.

English summary
Pakistan successfully test-fired an indigenously developed short-range surface-to-surface multi-tube missile on Tuesday, DawnNews reported. The Hatf IX (NASR) has a range of 60 kilometres and can carry nuclear warheads with high accuracy and possesses shoot and scoot attributes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X