For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய். சீனாவில் 37 ரூபாய், வங்காள தேசத்தில் 43 ரூபாய் 40 பைசா, அமெரிக்காவில் 67 ரூபாய், இந்தியாவில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல்விலை 78 ரூபாய் என்பது முறைதானா? மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் திண்டிவனத்தில் நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

போராட்டத்தின்போது ஸ்டாலின் பேசியதாவது:

வரலாறு காணாத வகையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது பஸ் கட்டணம், மின்கட்டனம் உயர்த்தப்படவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்கக்கோரி அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் தமிழக அரசு வாட் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்திருக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் 2006-ம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபோதும், 2008-ம் ஆண்டில் டீசல் விலையை உயர்த்தியபோதும், திமுக அரசு வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்தது.

தற்போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் கோவாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே வேளையில் வாட்வரியை முழுமையாக ரத்து செய்து பெட்ரோல் விலையை 12 ரூபாய்க்கு குறைத்து மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுகவை அதிமுகவினர் கேலி செய்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் பெட்ரோல் விலையை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் கோவாவில் வாட் வரியை ரத்து செய்தது போல் தமிழகத்தில் அதிமுக அரசு வாட்வரியை ரத்து செய்து பெட்ரோல் விலையை குறைத்து வழங்கவில்லை. இவர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது நியாயம் இல்லை.

தமிழகத்தில் அதிமுக அரசு வாட்வரியை ரத்து செய்து பெட்ரோல் விலையை குறைத்து மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என்றார் அவர்.

English summary
Karunanidhi to lead DMK's agitation against Petrol price hike today. He will lead the party protest in Chepauk, Chennai. Stalin will agitate against the centre and state govts in Tindivanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X