சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதித்து சப் இன்ஸ்பெக்டர் மகள் பலி
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகள் சிகிச்சை பலனின்றி பலியானார்.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி என்று தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இளம்பெண் ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.
சென்னை கிண்டியில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் காசிநாதன். இவரது மகள் மஞ்சுளா(29). மஞ்சளாவுக்கு கடந்த வாரம் முதல் காய்ச்சல் இருந்தது.
இதனையடுத்து அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையி்ல நேற்று இரவு சிகிச்சை பலனின்று மஞ்சுளா இறந்தார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்க, சுகாதாரத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications