புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முறைகேடா... புகார் அளிக்க செல்போன் எண்கள் இதோ!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில், வாக்குப்பதிவின் போது ஏற்படும் முறைக்கேடுகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க முக்கிய செல்போன் எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூன்) 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட அதிமுக, ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் தயாராக உள்ளன. தேர்தலின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறலாம் என்று பல கட்சியினரும் அச்சம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தேர்தலின் போது முறைகேடுகளை தவிர்க்க மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஏற்படும் முறைக்கேடுகள் குறித்து புகார் தெரிவிக்க முக்கிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க முக்கிய செல்போன் எண்களின் விபரம்:
மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் கலையரசி-94441 81000
மாவட்ட வருவாய் அதிகாரி நாகராஜன்-94450 00924
தேர்தல் நடத்தும் அதிகாரி, கோட்டாச்சியர் முத்துமாரி-94450 00468
தாசில்தார் சுப்பையா-94450 00641
வட்ட வழங்கல் அதிகாரி மோகன்ராஜ்-94450 00312
கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)-94450 08146
சிறப்பு தாசில்தார்-99430 98386
டோல் ப்ரீ நம்பர்- 1800 42 57 063
இந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், அடுத்த சில நிமிடங்களில் உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் மேற்கண்ட செல்போன் எண்களில் வாக்காளர்களும், பொதுமக்களும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications