மதுரை கலெக்டர் சகாயத்தை டிரான்ஸ்பர் செய்ய வைத்த கல்குவாரி அதிபர்?

நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயத்தை தமிழக அரசு, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக திடீரென மாற்றி உத்தரவிட்டது. இந்த மாறுதல் மதுரை மாவட்டத்தில் பொது மக்கள், அரசியல் கட்சி, சமூகநல அமைப்புகள் என்று பல தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கலெக்டர் சகாயம் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நுகர்வோர் அமைப்பினர், சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி, திருநங்கைகள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் சகாயம் மாற்றத்திற்கு பல சம்பவங்கள் காரணம் என்றாலும், மதுரையில் உள்ள பிரபல கல்குவாரி நிறுவனம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கல் குவாரியில் சுமார் ரூ.16,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக கலெக்டர் சகாயம் கண்டறிந்தார். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு விரிவான அறிக்கையை சகாயம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை தான் தென் மாவட்ட அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளதாக தெரிகிறது.
இதனால் மதுரை கலெக்டர் சகாயத்தை இடமாற்றம் செய்தே ஆக வேண்டும் என்று அந்த பிரமுகர் 2ம் கட்ட மாண்புமிகு ஒருவரிடம் வேண்டுகோள் விடுக்க, அதற்கான பலன் ஒரிரு நாட்களில் கிடைத்ததாம்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்த அந்த அறிக்கையின் அடுத்த கட்டம் என்ன, அதன் மீது நடவடிக்கை என்ன என்பதை அறிய சமூக ஆர்வலர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.
தமிழக அரசு அந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசியல் பரபரப்பு நிபுணர், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியை நாடப் போவதாக மதுரையில் இருந்து மக்கள் குரல்கள் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications