உலக வங்கியிடம் ரூ.2,800 கோடி கடன் கேட்டு நிற்கும் இலங்கை: அமைதி காக்கும் உலக வங்கி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: உலக வங்கியிடம் இருந்து ரூ.2,800 கோடி கடன் கேட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரூ.2,800 கோடி கடன் வழங்குமாறு உலக வங்கியிடம் இலங்கை அரசு கேட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும். இந்த கடன் மூலம் எரிபொருள் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியு் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, உலக வங்கியிடம் இருந்து ரூ. 13,750 கோடி கடன் வாங்கி அதை உரிய முறையில் செலுத்தியுள்ளோம் என்றார்.
எனினும், இலங்கையின் இந்த புதிய கடன் கோரிக்கை குறித்து உலக வங்கி இன்னும் பதில் அளிக்கவில்லை. இலங்கை அரசு ஏற்கனவே உலக வங்கியிடம் இருந்து பல பில்லியன் டாலர்களை கடனாக வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications