புதுக்கோட்டை தேர்தல்: தேமுதிகவுக்கு ஆதரவு தந்து வளைத்துப் போட திமுக 'ப்ளான்'?

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, தேமுதிக, ஐ.ஜே.கே. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக போட்டியிடவில்லை.
இந்த நிலையில், விஜயகாந்தின் தே.மு.தி.க. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆதரவு தருமாறு தி.மு.கவை கேட்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மச்சானும், இளைஞரணி செயலாளருமான சுதீஷ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில், தேமுதிக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளதாலும், புதுக்கோட்டை தொகுதியில் ஓரளவு முஸ்லீம் மக்கள் உள்ளதாலும், தங்களது வேட்பாளர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தேமுதிக இம்முறை நம்பிக்கையோடு உள்ளது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மறைவு சம்பவமும், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுவதும் தங்களது சாதகம் என தேமுதிக கருதுகிறது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மனதார அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள், தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தேமுதிக நம்புகிறது.
தேமுதிக இப்படி காய் நகர்த்தினால், திமுக தனது ராஜதந்திர அரசியலை அரங்கேற்றம் செய்ய தயராக உள்ளது. தே.மு.தி.க. தாமாக முன் வந்து ஆதரவு கேட்டால், ஆதரவு கொடுக்கலாம். அவ்வாறு மறைமுக ஆதரவு கொடுத்தால், தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசத்தை கட்டுப்படுத்தலாம்.
தேமுதிகவுக்கு ஆதரவு தருவதன் மூலம் அரசியல் நட்பு பலப்படும். மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான தேமுதிகவும், மற்றொரு பலம் வாய்ந்த கட்சியான திமுகவும் ஓரணியில் நின்றால் அதிமுகவை இலகுவாக சமாளிக்கலாம். இந்த புதுக் கூட்டணி மூலம் அதிமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்பது ஒரு கணக்கு
மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது, தேமுதிகவை காங்கிரஸ் பக்கம் வளைத்து விடலாம். அது மட்டுமல்ல, ராஜ்யசபா தேர்தல் வரும் போது, தேமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை திமுகவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது திமுகவின் சூப்பர் பிளான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications