ராணுவத்துக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யும் சீனாவின் போக்கு கவலைக்குரியது: ஏ.கே.அந்தோணி
டெல்லி: சீனாவின் ராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது கவலைக்குரியது என்று நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோணி பேசியதாவது:
நாங்கள் ஆயுதப் போட்டியை விரும்பவில்லை. சீனா ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது. ராணுவ தளவாடங்களைக் குவித்து வருகிறது. ஆனாலும் நாங்கள் எங்களுடைய வழியில் எங்கள் நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் எமது ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நாங்கள் ராணுவத்தை வலிமைப்படுத்துவது என்பது எமது தேச நலன்சார்ந்ததே. சீனாவும் இந்தியாவும் ஆசிய கண்டத்தில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே அரசியல் நிலைத்தன்மை மற்றும் அமைதியை உருவாக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றார் அவர்.
மேலும் ராணுவ நிதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் சீனா வெளிப்படையாக செயல்பட வேண்டும்.. அது ரகசியமாக செயல்படுவது என்பது ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஜப்பான் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications