கடலூர் படகு விபத்தில் இருவர் பலி- 7 பேர் கதி என்ன?
கடலூர்: கடலூர் சங்கொலிகுப்பத்தில் திருவிழா நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு படகில் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
சங்கொலி குப்பத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இரவு நடைபெற்ற பாட்டுக்கச்சேரியைக் காண சங்கொலிகுப்பம் அருகே நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த சுமார் 20 பேர் படகில் உப்பனாற்றை கடந்து வந்தனர். பாட்டுக் கச்சேரியை பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. படகு விபத்தில் சிக்கியோரின் கூக்குரலைக் கேட்டு அருகில் உள்ள கிராமத்தினர் மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதில் ராதிகா மற்றும் லோகநாயகி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் நீரில் மூழ்கிய 7 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications