மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன: சோனியா

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

காங்கிரஸூக்கு எதிரான சக்திகளும் எதிர்க்கட்சிகளும் பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அவை அனைத்துமே ஆதாரமற்றவை. நாட்டின் பொருளாதார நிலைமையானது நிச்சயம நமக்கு சவாலானாதுதான். ஆனால் காங்கிரஸ் அல்லாத மாநிலங்கள் மத்திய அரசு உருவாக்கும் கொள்கைகளை ஏற்க மறுத்து முரண்பாடான நிலையைக் கடைபிடித்து வருகின்றன.

மாநில சட்டப்பேரவைகளுக்கும் அடுத்த பொதுத்தேர்தலுக்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் நமது கட்சியை வளர்த்தால்தான் அதைப் போல் இரு மடங்கு பலனை எதிர்பார்க்க முடியும். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+