மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றார் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர்
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்ற மாநிலங்களவை அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் அறையில் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சச்சின் தெண்டுல்கரின் அரசியல் வாழ்க்கை இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
கிரிக்கெட் போட்டியில் நாட்டுக்குப் பல பெருமைகளை சேர்த்த சச்சின் அண்மையில் சதத்தில் சதமடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இநிந்லையில் அவர் நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சச்சின் மனைவி அஞ்சலி, மற்றொரு எம்.பியான ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications