வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ43 லட்சம் கொள்ளை: மேலும் 8 பேர் கைது
சென்னை: சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தொழில் அதிபர் வீட்டில் 43 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எர்ணாவூர் ஐ.டி.சி கம்பெனி எதிரில் மளிகை கடை நடத்தி வரும் கனகராஜ் வீட்டுக்கு கடந்த 21-ந் தேதி சென்ற 4 பேர் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ43 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக கனகராஜ் எண்ணூர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்த கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான கொள்ளை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொள்ளையில் கனகராஜின் நண்பர் ஒருவரின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 8 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கொள்ளையில் தலைவனாக செயல்பட்ட முருகன் கடந்த சில மாதங்களாக எண்ணூர் பகுதியில் தங்கி இருந்தான். அப்போது ஜெயவேலு என்பவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஜெயவேலு கனகராஜிடம் கடன் வாங்கியுள்ளார். அப்போது கனகராஜிடம் அதிக அளவில் பணம் இருப்பதை பார்த்து முருகனிடம் கூறியுள்ளார். முருகன் திட்டம்போட்டு வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரி கனகராஜிடம் ரூ.43 லட்சம் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications