மோடியால் மட்டுமே பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியும்-ஆர்எஸ்எஸ்

90களில் தனி மனிதராக, எப்படி பாஜகவை மத்தியில் ஆட்சியில் அமர்த்தினாரோ வாஜ்பாய், அதேபோல தனி மனிதராக பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தக் கூடி திறமையும், தகுதியும் மோடிக்கு மட்டுமே உணடு என்றும் ஆர்கனைசர் புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் மேலும் கூறுவதாவது...
நாட்டிலேயே மிகவும் பெரிய அளவில் மக்கள் செல்வாக்குடன் கூடிய, பிரபலமான தலைவர் மோடி மட்டுமே. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியே பாஜகவின் முகவரியாகத் திகழ்வார். தனி மனிதராக பாஜகவுக்கு உயர்வு கொடுக்கக் கூடிய ஒரே தலைவராக மோடி மட்டுமே இருக்கறார்.வாஜ்பாய் எப்படி பாஜகவை ஆட்சியில் அமர்த்தினாரோ அதேபோல மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த மோடியால் மட்டுமே முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பாஜகவுக்குள் கிட்டத்தட்ட அடிதடியே நடந்து வருகிறது. மோடி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அதற்கான அடிப்படை வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவு அவருக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications