சச்சினால் ஒரு அமைச்சர் பதவியைக் கூட பெற முடியாது, தெரியுமா?

ஜூன் 4ம் தேதி ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார் சச்சின். இதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியுள்ளது. இருப்பினும் சச்சினால் மத்திய அமைச்சர் பதவிக்கெல்லாம் வர முடியாது.
இந்திய அரசியல் சட்டப்படி, குடியரசுத் தலைவரால் இந்திய நாடாளுமன்றத்திற்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்படும் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் ஓட்டுரிமை கிடையாது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த நியமன எம்.பிக்கள் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாது.
நியமன எம்.பியாக நியமிக்கப்படும் ஒருவரால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியாது. அப்படி ஆக வேண்டும் என்று விரும்பினால், பதவிய ராஜினாமா செய்து விட்டு லோக்சபா தேர்தல் அல்லது ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும்.
இப்படி ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் கூட சச்சினுக்கு, பிற எம்.பிக்களுக்கு கிடைக்கும் அத்தனை சலுகைகளும் கிடைக்கும். இருப்பினும் மற்ற எம்.பிக்கள் போல சச்சினால் செயல்பட முடியாது -கிட்டத்தட்ட ஒரு டம்மி எம்.பியாகவே சச்சின் செயல்படமுடியும். உலக சாதனைகள் பல படைத்தவருக்கு இப்படித்தான் 'டம்மி' கெளரவத்தைக் கொடுப்பதா?












Click it and Unblock the Notifications