கேரளாவில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை!

Subscribe to Oneindia Tamil

South West Monsoon
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டும் ஜூன் 1ம் தேதி பருவ மழை தொடங்கும் என மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இதன்படி மே 30ம் தேதி அந்தமான் மற்றும் லட்சத்தீவில் பருவமழை தொடங்கியது. இதனால் கேரளாவில் ஜூன் 1ம் தேதி மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கேரளாவில் பருவமழை தொடங்கவில்லை.

அரபிக்கடலில் வீசும் காறறின் வேகம் கு்றைந்தது தான் இதற்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த இருதினங்களாக பருவ காற்றின் வேகம் அதிகரித்து வந்தது. இதனால் பருவ மழை இன்னும் இரு தினங்களில் தொடங்க வாய்ப்புள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று கேரளாவில் பருவ மழை தொடங்கியது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளளது. அதேபோல லட்சத்தீவு, கடலோர கர்நாடகத்திலும் மழை பொழியத் தொடங்கியுள்ளது.

அடுத்த 2 நாட்களில் கேரளாவையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் பருவ மழை பெய்யத் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+