டெல்லி: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பபுவதற்கு பணம் கேட்டு சர்ச்சையில் சிக்கி பாஜகவிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கப்பட்டவரான பிரதீப் காந்தி என்பவரும் கலந்து கொண்டார். சச்சினுக்கு அருகிலேயே அவர் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் ராஜ்யசபா நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார் சச்சின். நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருடன் கூடவே காணப்பட்டார் முன்னாள் சட்டிஸ்கர் எம்.பி. பிரதீப் காந்தி. போட்டோ எடுத்தபோதும் அவர் சச்சினுக்கு் அருகில் நின்றிருந்தார்.
இந்த காந்தி வேறு யாறுமல்ல, கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பவும், கேள்வி கேட்கவும் லஞ்சம் வாங்கியதாக சிக்கிய 10 எம்.பிக்களில் ஒருவர். இவர பாஜகவைச் சேர்ந்தவர். எம்.பி. பதவியிலிருந்தும், பாஜகவிலிருந்தும் இவர் பி்ன்னர் நீக்கப்பட்டார்.
ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அறையில்தான் சச்சின் பதவியேற்பு நடந்தது. அந்த அறைக்குள் யாரும் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது. ஆனால் காந்தி எப்படி நுழைநதார் என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
It was a big day for Indian sports. Sachin Tendulkar took oath as a Rajya Sabha member on Monday after being nominated by the government in April. But, the event was not without its share of controversy. Pradeep Gandhi, an ex-Member of Parliament from Chhattisgarh's Rajanandgaon, was standing next to Sachin during the photo-op after the cricketer took oath in the Rajya Sabha Chairman Hamid Ansari's chamber. Mr Gandhi was among the 10 MPs who were expelled from Parliament and BJP after the cash-for-query controversy in 2005. He was, however, re-inducted into the BJP fold in 2008.