புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஜெயலலிதா 9-ந் தேதி சூறாவளி பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பேசும் இடங்கள்
12-ந்தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா 9-ந்தேதி கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
புதுப்பட்டி, மழையூர், சம்பட்டி விடுதி நால் ரோடு, மாத்தூர், இச்சடி, பிருந்தாவனம், மியூசியம், அண்ணாசிலை. டி.வி.எஸ்.கார்னர் ஆகிய இடங்களில் ஜெயலலிதா அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேச உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications