இன்று லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
லண்டன்: ஈழத்தமிழர்களை அழித்தொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் லண்டன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்து தமிழர் பேரவை சார்பில் இன்று லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து ஸ்காட்லாந்து தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து மண்ணையும், கலாச்சாரத்தையும் ஆக்கிரமித்து சீரழித்தவர் அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே.
சர்வாதிகார குடும்ப ஆட்சியின் தலைமைச் சதிகாரனும், மனநோயாளியுமான ராஜபக்சே பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார் என்ற செய்தி ஐரோப்பிய தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களையே கடும் கோபம் கொள்ள வைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குற்றவாளி ராஜபக்சே குடும்பம் தான். இதற்காக அவரும், அவரது அடிவருடிகளும் தண்டிக்கப்படும் வரை உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களை துரத்தியடிப்போம் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் உணர்வோடும் உறுதியோடும் உள்ளனர்.
அந்த உணர்வினை, உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 6ம் தேதி(இன்று) லண்டனில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்.
காலத்தால் ஒன்றுபடுவோம், கை கோர்த்து நிற்போம். கூறுபட்டு தமிழ்ச் சமுதாயம் நூறு குழுவாகத் தோன்றி மாறுபட்டுச் சிந்தித்தால் வீழ்ச்சி தான் முடிவு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications