நெல்லையில் 29ம் தேதி அரசு பொருட்காட்சி தொடக்கம்: 45 நாட்கள் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்தாண்டுக்கான அரசு பொருட்காட்சி வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையை பொருத்தவரை மாநகராட்சி எதிரே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் ஆண்டு்க்கு ஒருமுறை அரசு பொருட்காட்சி நடத்தப்படும். நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம், குற்றால சீசனை முன்னிட்டு பொருட்காட்சி நடத்தப்படுவதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் நெல்லையில் இல்லாததாலும் அரசு பொருட்காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நெல்லையில் அரசு பொருட்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் வரும் 29ம் தேதி முதல் 45 நாட்கள் அரசு பொருட்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதி்ல் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நெல்லை மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை, சமூகநலத்துறை, மாற்று திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரங்கங்கள் இடம் பெறுகின்றன. இவை தவிர குழந்தைகளை மகிழ்விக்க ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் மாநகராட்சி எதிரேயுள்ள பொருட்காட்சி மைதானத்தில் ஓரிரு நாட்கள் துவங்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+