பங்கேற்பு பத்திரம் மூலமான வெளிநாட்டினரின் 1 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது
டெல்லி: பங்கேற்புப் பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டினர் கடந்த 3 மாதங்களில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
செலவு மற்றும் கால விரயத்தைக் குறைப்பதற்காக ஏற்கெனவே செபியிடம் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்வதற்காக பங்கேற்பு பத்திர நடைமுறை கொண்டு வரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த வெளிநாட்டு நிறுவனங்கள் சார்ந்த முதலீட்டில் இதன் பங்களிப்பு சுமார் 50 விழுக்காடாக இருந்தது.
இந்நிலையில் கடந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புக் கொள்கையை அரசு வெளியிட்டது. புதிய நடைமுறையின் காரணமாக மோரீஷஸ் போன்ற வரி குறைந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வரும் முதலீடுகளுக்கும் வரி விதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டது. இத்தகைய அச்சம் மற்றும் கறுப்புப் பண விசாரணை ஆகியவற்றில் சிக்கிவிடக்கூடாது என்பதால் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு மறுமுதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடு ரூ. 2 லட்சம் கோடியாக உயரும் என்று கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச்சுக்குப் பிறகு படிப்படியாக முதலீடு குறைந்து போயிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications