தட்டுப்பாட்டை போக்க கூடுதல் மண்ணெண்ணெய் தாருங்கள்: பிரதமருக்கு ஜெ. மீண்டும் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மேலும் உயர்த்தக் கோரி முதல்வர் ஜெயலிலதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் ஒரு மாத மண்ணெண்ணெய் தேவை 65,140 கிலோ லிட்டராக உள்ளது. ஆனால் 44,580 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் 25ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இந்த பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அதன் பின்பு 14ம் தேதி தங்களை நேரில் சந்தித்தபோது கோரிக்கை மனுவும் அளித்திருந்தேன்.
2011 ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு 52, 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதன் அளவு திடீரென கடந்த ஆண்டு ஜூனில் 44, 580 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதன் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 39, 429 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக மக்கள் மிகப்பெரிய அளவுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும், குறைந்தபட்சம் அதன் அளவை 52, 806 கிலோ லிட்டராக அதிகரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான மாதாந்திர ஒதுக்கீட்டின் அளவில் 3,031 கிலோ லிட்டரை அதிகரித்து 42, 460 கிலோ லிட்டராக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
குறைக்கப்பட்ட அளவுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். 52, 806 கிலோ லிட்டரில் இருந்து 39, 429 கிலோ லிட்டராக அதாவது 13,377 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்துக்கு விநியோகம் செய்யத் தேவையான மண்ணெண்ணெய் அளவு 65,140 கிலோ லிட்டராகும். எனவே, குறைந்தது 52, 806 கிலோ லிட்டராகவாவது மண்ணெண்ணெய் அளவை உயர்த்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஏழை மற்றும் சாமானிய மக்கள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் துயரைத் துடைக்க என்னுடன் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications