மதுரையில் 22 பஞ்சாயத்து தலைவர்கள் சஸ்பெண்ட்: கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிரடி
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊராட்சி நிதியை பல்வேறு வழிகளில் முறைகேடாக பயன்படுத்திய 22 ஊராட்சித் தலைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரை மாவட்டத்தில் சில ஊராட்சிகளில் மக்களின் வரிப்பணம் பல்வேறு வழிகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறிப்பட்டுள்ளது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 ஊராட்சிகள், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் கள்ளந்திரி, மதுரை மேற்கு, திருமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு பஞ்சாயத்து உட்பட 22 ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக தனிநபருக்கு செக் வழங்குதல், பணிகளுக்கு மாற்று நிதியை திருப்பிவிடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடு நடைபெற்ற ஊராட்சிகளில் செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகள் வேறு ஊராட்சிகளில் நடந்தால் அதன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் ஊராட்சித் தலைவர்கள் தங்களுக்கான அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அவருக்குப் பதில் அவரது கணவரோ அல்லது வேறு நபரோ தலைவராக செயல்பட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரை மாவட்டத்தில் 22 ஊராட்சித் தலைவர்களிடம் இருந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட 22 ஊராட்சித் தலைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications