நான் என்றுமே உங்கள் தொண்டன், தோழன்: கருணாநிதி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளவராயன் குடிக்காடு கிளைக் கழக திமுக நிர்வாகிகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசுகளும், பொற்கிழியும் வழங்கும் விழா காட்டூரில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளவராயன் குடிக்காட்டில் திமுக சார்பில் நடக்கும் 100வது மாதக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.
மயிலாடுதுறையில் நடந்த மாநாட்டில் பேசிய நம் தலைவர் அண்ணா கூறுகையில், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நம் கிளை இருக்க வேண்டும். கிளைகள் மட்டும் இருந்தால் போதாதது. அந்த கிளைகளுக்கு ஓரளவுக்கு வசதியான சிறிய கட்டிடங்களாவது இருக்க வேண்டும் என்றார்.
ஆயிரம் கிளைக் கழகங்களுடைய சாவிக்கொத்தை என் கையில் கொடுக்க வேண்டும் என்று அண்ணா அன்று சொன்னார். இன்று நம் கழக வளர்ச்சியைப் பார்த்தால் ஆயிரம் என்ன 10,000 சாவிகளைக் கூட கொத்திலே இணைத்து கொடுக்கலாம் போல் இருக்கிறது. கழகத்திற்கு பெரிய தோல்வி ஏற்பட்டுவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாகப் பார்க்கும் வீரனே கழகத்தின் தொண்டன் ஆகும். வெற்றியும், தோல்வியும் ஒன்று தான் என்ற கூற்றுக்கேற்ப இயங்கும் ஒரே இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
இங்கே கழக நண்பர்களில் சிலருக்கு பரிசுகளும், சிலருக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது. அவர்கள் ஒன்றும் அதையெல்லாம் எதிர்பார்த்து பணியாற்றிவில்லை. கழகம் எனக்கு என்ன செய்தது என்றி்ல்லாமல் நான் கழகத்திற்கு என்ன செய்தேன் என்று நினைப்புடன் பணியாற்றுபவர் தான் உண்மையான தொண்டன். அப்பேர்பட்ட கழகத் தோழர்கள் இருக்கும் இடம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
குறிப்பாக தஞ்சை மாவட்டம். அதிலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டம். திராவிட முன்னேற்றக் கழக தீரர்களின் கோட்டமாக இந்த புள்ளவராயன் குடிக்காடு இருப்பதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது ஆட்சி மாறிவிட்டது. நான் கடந்த ஆண்டு இங்கு வந்தபோது முதல்வராக வந்தேன். தற்போது முன்னாள் முதல்வராக வந்துள்ளேன். முன்னாள்-இந்நாள் எல்லாம் பதவிக்குத் தான். ஆனால் நான் என்றுமே உங்களுக்கு தொண்டனாக, தோழனாக இருப்பேன் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து, தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்ததி செய்வது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதனால் தான் இன்றைக்கும் நீங்கள் என்னை இவ்வளவு உற்சாகமாக வரவேற்கிறீர்கள் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications