குழந்தைகளை வேலை பார்க்க வைத்து பணம் பெறுவது குடும்பத்துக்கே அவமானம்-ஜெ.
சென்னை: குழந்தைள் மூலம் பெறப்படும் வருமானமானது, வீட்டுக்கே அவமானத்தைத் தருவதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி ஜெயலலிதா விடுத்திருந்த செய்தியில்,
உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்' கடை பிடிக்கப்படுகிறது. குழந்தை நலன் பேணும் நெறியிலிருந்து விலகி, அவர்களை பணியில் அமர்த்தும் முறை கொடியது. இந்த நாளில் குழந்தை செல்வத்திற்கு கல்வி செல்வம் வழங்க மறுப்பது மனித நெறிக்கு எதிரானது என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
பெற்றோர் உழைப்பு வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை! குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை! ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குழந்தை பருவத்தை அனுபவித்தல் ஆகியவற்றை அளித்தாக வேண்டும். அனைத்து குழந்தைகளையும் மதிப்புள்ளவர்களாக மாற்றி அவர்களை சமுதாயத்தின் சொத்தாக காக்க வேண்டும் என்பதே எனது தலைமையிலான தமிழக அரசின் உயரிய உன்னத நோக்கமாகும்.
குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குழந்தைகள் சுதந்திரமாக கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லா கல்வி, சத்தான சத்துணவு, விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மிதி வண்டிகள், காலணிகள், புத்தகப் பை, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகம், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடை நிற்றலை குறைக்க ஊக்கத்தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்' என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டோம் என உறுதிபூண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை நேய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நம் கடமையை ஆற்றிடுவோம் என்று அவர் கூறியிருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications